Advertisment

Punnagai Logo

முடியும் ஆனா முடியாது..! என்ற நிலையில் பெட்ரோல் விலை - என்ன சொல்கிறது எஸ்பிஐ ஆய்வறிக்கை..?

 பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலையை 2 ரூபாய் 50 காசுகளும் குறைக்க முடியும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக உள்ளூர் சேவை வரி, மதிப்பு கூட்டப்பட்ட வரி ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. அதிலும் சமீபகாலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துக் கொண்டே வருகிறது. இதனால் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. 

இதற்கிடையே, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால்வரியைக் குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆய்வறிக்கையை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது.

அதில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால், மாநிலங்களுக்கு ஏற்கனவே கிடைக்கும் வருவாயுடன் கூடுதலாக 22,700 கோடி ரூபாய் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநிலங்களின் நிதிநிலை மேம்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பட்ஜெட் மதிப்பீட்டைவிட, மாநிலங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலையை 2 ரூபாய் 50 காசுகளும் குறைக்க முடியும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

 
 

Advertisment

English Summary

Can not be .. Petrol Price - What Does SBI Report?

 
NewsFast Logo