Advertisment

Punnagai Logo

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சந்திரபாபு நாயுடு 

மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில், தேசிய அளவில் ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், நேற்று  காலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பாரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, ஜனநாயகத்தையும், ஜனநாயக அமைப்புகளையும் காக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் கடந்த காலங்களை குறித்து பேசவில்லை எனத் தெரிவித்த ராகுல் காந்தி, தற்போதைய நிலை குறித்தும், எதிர்கால நிலை குறித்தும் விவாதித்ததாக தெரிவித்தார்.

 
 

Advertisment

English Summary

Chandrababu initiatives for united front

 
NewsFast Logo