Advertisment

Punnagai Logo

பேஸ்புக் நிறுவனம்  அதிர்ச்சி தகவல் - பயனாளர்கள் கணக்கில் ஹேக்கர்கள் ஊடுருவல்

சமூக வலதளங்களில் ஜாம்பவானாக திகழும் பேஸ்புக், பயனாளர்கள் 5 கோடி பேரின் கணக்குகளில் ஹேக்கர்கள் ஊடுருவியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

சமூக வலதளங்களில் ஜாம்பவானாக திகழும் பேஸ்புக், பயனாளர்கள்  5 கோடி பேரின் கணக்குகளில் ஹேக்கர்கள் ஊடுருவியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஹேக்கர்கள் ஊடுருவலால் பயனாளர்களின் தகவலுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. 

செவ்வாய்கிழமை, ஹேக்கர்கள் ஊடுருவியதை செவ்வாய்க்கிழமை கண்டறிந்ததாகவும், வியாழக்கிழமை சரி செய்யப்பட்டதாகவும், பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் சூகர்பெர்க் தெரிவித்துள்ளார். மார்க் சூகர்பெர்க் மேலும் கூறும் போது, “ பயனாளர்களின் தகவல் எதுவும் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதா? என்பது எங்களுக்கு தெரியவில்லை. 

எனினும், இது மிகவும் தீவிர பிரச்சினை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ”வீயூ அஸ்” என்ற வசதியை பேஸ்புக்கில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளோம்” என்றார். 

 
 

Advertisment

English Summary

Facebook company shock information - hackers penetration into users account

 
NewsFast Logo