Advertisment

Punnagai Logo

வில்லங்கத்தில் சிக்கிய கணக்கு ஆசிரியருக்கு பள்ளி நிர்வாகம் நோட்டீஸ்...

டெல்லியில் உள்ள வித்யா மந்திர் பள்ளியில் கணக்கு ஆசிரியர், வீட்டுப்பாடம் செய்து வராத மாணவர்களை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், 3 மாணவர்களுக்கு காது கேட்காமல் போயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அந்த கணக்கு ஆசிரியருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்தாண்டு ஆசிரியர் அடித்ததில், மூட்டு விலகி ஒரு மாணவனுக்கு, இந்தாண்டு காது கேட்காமல் போயுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவனின் தாய் டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் வீடியோப்பதிவை பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.

மாணவர்கள் தாக்கப்பட்டது உண்மையாக இருக்கும்பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 
 

Advertisment

English Summary

Hit by teacher, Class 3 boy loses hearing ability

 
NewsFast Logo