Advertisment

Punnagai Logo

பா.ஜ.க.வில் இணைந்தார் இஷ்ரத் ஜகான் - மேற்குவங்கத்தில் பரபரப்பு

முத்தலாக் விவகாரத்து முறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இஸ்ரத் ஜகான் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். 

 

மேற்குவங்க மாநிலம் கோலாபாரி பகுதியில் வசித்து வருபவர் இஷ்ரத் ஜஹான். துபாயில் வசிக்கும் இவரது கணவர் ஜஹானை தொலைபேசி மூலம் முத்தலாக் என்று கூறி விவகாரத்து செய்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இஷ்ரத் ஜஹான் முத்தலாக்கை எதிர்த்து உச்சநீதீமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே 4 பேர் முத்தலாக் தொடர்பாக வழக்கு தொடுத்திருந்தனர். இவர்கள் அனைவரது வழக்குகளையும் 5 பேர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. 

விசாரணை முடிந்ததை தொடர்ந்து, முத்தலாக் நடைமுறைக்கு ஆறு மாதங்கள் இடைக்கால தடை விதித்து கடந்த ஆகஸ்ட் மாதம் சுப்ரீம் கோர்ட் அமர்வு தீர்ப்பு அளித்தது. இந்நிலையில், முத்தலாக் வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான இஷ்ரத் ஜஹான், ஹவுரா நகரில் பா.ஜ.க.வில் நேற்று இணைந்தார்.
 

 
 

Advertisment

English Summary

Israth Jahan Joined In Bjp

 
NewsFast Logo