Advertisment

Punnagai Logo

மின்சார பற்றாக்குறை எதிரொலி... ஜம்மு-காஷ்மீரில் சோலார் விளக்குக்கு கிராக்கி...

பிடிபி-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஜம்மு-காஷ்மீரில் கடும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 மணிநேரம் வரை மின்வெட்டு ஏற்படுவதால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். 

மின்வெட்டு பகல் வேளையில் வந்தால் பரவாயில்லை. இரவிலும் மின்வெட்டு ஏற்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர் காஷ்மீர் மக்கள். கடும் மின்பற்றாக்குறையால் தவித்து வரும் ஜம்மு-காஷ்மீரில், மக்கள் சோலார் மின்சாரப் பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர். 

வீடுதோறும் சோலார் விளக்குகளே மக்களின் தேவையை தற்போது பூர்த்தி செய்து வருகிறது. இருப்பினும், மின்சாரப் பற்றாக்குறையை போக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

 
 

Advertisment

English Summary

Jammu & Kashmir: Solar panels and solar powered lamps in high demand in Srinagar

 
NewsFast Logo