Advertisment

Punnagai Logo

ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு 

ஆதார் எண்ணை  வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு, செல்போன் இணைப்புடன் இணைக்க அரசு வலுவுறுத்தியது .அரசின் பலவேறு நலத்திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின்  அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்றம்  விரைவில் அமைக்க இருக்கிறது.

நேற்று உச்சநீதிமன்றத்தில்  மத்திய அரசு சார்பில் வங்கி கணக்கு, பான் கார்டு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 2018-ம் ஆண்டு மார்ச் மாதம்  31-ந்தேதி வரை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இது பற்றிய  அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது. அதன்படி பான் கார்டு, வங்கி கணக்கு ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வருகிற 2018 மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக் கெடுவை நீடிக்க முடியாது. என்றும் அவர்கள் தெரிவித்தனர் .  செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு  2018 பிப்ரவரி 6-ந்தேதி வரை அவகாசம் இருப்பதால் இதில்  மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

Last date to link aadhar card with pan was extended upto march 31

 
NewsFast Logo