Advertisment

Punnagai Logo

லூதியானாவில் துணி தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து...

பஞ்சாப்பின் லூதியானாவில் துணி தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பணியாளர்கள் வழக்கம்போல் காலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டதால், அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீயை தொழிலாளர்கள் அணைக்க முற்பட்டனர். ஆனால், முடியவில்லை. இதையடுத்து, தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

உடனே சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள், தீயை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டனர். துணி தயாரிக்கும் ஆலை என்பதால், தீ அடுத்த அறைகளுக்கும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. நிலைமையை சமாளிக்க முடியாததால், அருகாமையில் உள்ள ஊர்களில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. 

மொத்தம் 3 தீயணைப்பு வண்டிகளும், 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும்பணியில் ஈடுபட்டனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

 
 

Advertisment

English Summary

Ludhiana: Fire breaks out in a clothing factory in Textile colony

 
NewsFast Logo