Advertisment

Punnagai Logo

மத்தியபிரதேச மாநிலத்தில் இரும்புச்சத்து மாத்திரைகள் உட்கொண்ட மாணவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு...

மத்தியபிரதேசத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் உடல்நலன் கருதி அவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள் அரசு சார்பில் வழங்கப்பட்டது.

அந்த மாத்திரைகளை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே மாணவர்கள் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது, 12 மாணவர்கள் மட்டும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இரும்புச்சத்து மாத்திரைகள் காலாவதியானதா அல்லது வேறு நோய்களுக்கான மாத்திரைகளை மாற்றி கொடுக்கப்பட்டதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

 
 

Advertisment

English Summary

madya pradesh school students ill take iron tablets

 
NewsFast Logo