Advertisment

Punnagai Logo

பிதமர் மோடியும் ”கால் டிராப்” பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

 

பேசிக்கொண்டு இருக்கும் போதே போன் இணைப்பு துண்டிக்கப்படும் பிரச்னையை பிரதமர் மோடியும் அனுபவித்திருக்கிறார். அதனால், அந்தப்பிரச்சினையை சரி செய்யுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். 

டெல்லி விமான நிலையத்தில் இருந்து அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு செல்வதற்குள் பிரதமரின் போன் இணைப்பு பலமுறை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தொலைத் தொடர்பு துறை அதிகாரிகளை அழைத்து, இந்த பிரச்னையை விரைவில் சரிசெய்யும்படி மோடி அறிவுறுத்தி உள்ளார். இந்த தொழில்நுட்ப பிரச்னையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும், வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்க வேண்டும் எனவும் மோடி கூறி உள்ளார்.

இது தொடர்பாக தொலை தொடர்பு நிறுவனங்களிடம் எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் மோடி கேட்டுள்ளார். முறையான சேவை வழங்காத தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கும் வகையில் ட்ராய் சில விதிமுறைகளை கொண்டு வந்ததாகவும், ஆனால் தொலை தொடர்பு நிறுவனங்கள் அதனை ஏற்க மறுப்பதாகவும் தொலைதொடர்பு துறைசெயலாளர் பதில் அளித்துள்ளதாக தெரிகிறது. அதற்கு தொலை தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.

 
 

Advertisment

English Summary

Modi has also been hit by a "call drop" issue.

 
NewsFast Logo