Advertisment

Punnagai Logo

ஒபாமாகேர் திட்டத்தை காப்பியடித்து இந்தியாவில் "மோடிகேர்"

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக்காலத்தில் ஒபாமாகேர் என்று மருத்துவத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அத்திட்டத்தில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், தற்போது அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

இந்த சூழலில், அதே ஊழல் மிக்க திட்டத்தை காப்பியடித்து இந்தியாவில் மோடிகேர் என்ற பெயரில் செயல்படுத்தாமல் இலவச மருத்துவ திட்டம் என்ற பெயரில் மறைமுகமாக பிரதமர் பெயரில் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. சுமார் 10 கோடி குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியோ அல்லது அக்டோபர் 12-ம் தேதியோ செயல்படுத்தப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ராஷ்ட்ரிய சுவாஸ்த்யா பீமா யோஜ்னா என்ற பெயரில் செயல்பட்டு வரும் திட்டத்திற்கு மாற்றாக மோடிகேர் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது. இத்திட்டத்திற்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. 

 
 

Advertisment

English Summary

'Modicare' to be launched on Aug 15 or Oct 2: Sources

 
NewsFast Logo