Advertisment

Punnagai Logo

HAL நிறுவனத்தை மூடுவதற்கு மோடி முயற்சி - ராகுல் காந்தியை சந்தித்த ஊழியர்கள் கதறல் 

இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு, பணம் வழங்காமல் பட்டினி போட்டு மூடுவதற்கு மத்திய அரசு நினைக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு (எச்.ஏ.எல்.) வழங்காமல் அனில் அம்பானி நிறுவனத்துக்கு வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை மூடும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். 

இந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தியை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் நேற்று சந்தித்தனர். அப்போது இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் குறித்தும் தங்கள் கவலையை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரபேல் போர் விமானங்களை தயாரிக்க நாங்கள் இப்போதும் தயாராக உள்ளோம். அதற்கான திறமை எங்களிடம் உள்ளது.

போர் விமானங்களை தயாரிப்பதில் நாங்கள் திறமையற்றவர்கள் என்ற பொய் பிரச்சாரத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி வருகிறார். உண்மையில் இந்திய விமானப் படையின் வலிமைக்குப் பின்னால் இருப்பது எங்கள் திறமைதான் என்பதை மறந்துவிடக் கூடாது. 

இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு, பணம் வழங்காமல் பட்டினி போட்டு மூடுவதற்கு மத்திய அரசு நினைக்கிறது. ஒரு ரபேல் விமானத்தை கூட இதுவரை வழங்காத டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்கு 20,000 கோடி ரூபாய் முன் பணத்தை மத்திய அரசு கொடுத்துள்ளது. ஆனால் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரித்து சப்ளை செய்துவிட்ட ஹெலிகாப்டர்களுக்கான பில் தொகை 14,000 கோடி ரூபாயை தருவதற்கு மறுக்கிறது மத்திய அரசு. 

உலகளாவிய தொழில்நுட்பத்தில் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ரபேல் விமானங்களையாவது தயாரிக்கும் வாய்ப்பை எங்களுக்கு வழங்க வேண்டும். 

பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் தும்கூரில் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் சார்பில் ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த பணியும் அங்கு நடக்கவில்லை” என்று தெரிவித்தனர்.

 
 

Advertisment

English Summary

NDA conspiracy to ‘bleed and shut down’ HAL: Workers

 
NewsFast Logo