Advertisment

Punnagai Logo

புதுசா ஒரு "கார்ட்" - மோடி அரசின் 'ஒரு நாடு; ஒரு கார்டு' திட்டம் விரைவில் ...

ஏற்கனவே ஆதார் அட்டை, பான் கார்ட், வாக்காளர் அட்டை என ஒவொரு வகையான அடையாள அட்டைகள் நாட்டின் குடிமக்களுக்கு இருக்கையில் புதிதாக தற்போது ஒரு அட்டையை மத்திய அரசு அறிமுக படுத்த உள்ளது. இந்த திட்டத்திற்கு 'ஒரு நாடு; ஒரு கார்டு' திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

மேலும் இந்த 'ஒரு நாடு; ஒரு கார்டு' திட்டத்தை, மத்திய அரசு, விரைவில் அமல்படுத்த உள்ளது. 'இதற்காக தரப்படும் கார்டை பயன்படுத்தி, ரயில், பஸ், மெட்ரோ ரயில் என, அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் செல்ல முடியும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசுக்கு திட்டங்களை வகுத்து தரும் அமைப்பான, 'நிடி ஆயோக்' மற்றும், சி.ஐ.ஐ., எனப்படும், இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை சேர்ந்து, டில்லியில் நேற்று, இந்தி யாவின் அடுத்த தலைமுறை போக்குவரத்து வசதிகள் தொடர்பான கூட்டத்தை நடத்தின.

இந்த கூட்டத்தில்  நிடி ஆயோக் தலைவர், அமிதாப் காந்த் பேசுகையில் : 'மொபைலிட்டி மார்க்கெட்' எனப்படும், போக்கு வரத்து சந்தை, இந்தியாவில், வரும் காலங்களில் பல்வேறு அதிரடி மாற்றங்களை சந்திக்க உள்ளது. இதனால், மின்சாரத்தை சேமித்து வைக்கும் பேட்டரி தொழில், அசுர வளர்ச்சியை அடைந்து வருகிறது. வரும் ஆண்டுகளில், பேட்டரி உற்பத்தி தொழில், 21 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு சந்தையாக உருவெடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,நம் நாட்டின் வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு, மின்சாரம் சேமித்து வைக்கும் பேட்டரிகளை சப்ளை செய்யும்

தொழிலின் பங்கு, முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக, மின்சாரம் சேமிக்கும் பேட்டரிகள் மட்டுமே இருக்க முடியும். இதனால், புதுப்பிக்கத்தக்க மின் சக்தியை நோக்கி, வாகனங்கள் உற்பத்தி துறை நகர்ந்து வருகிறது.

வரும், 7ல், டில்லியில், நாட்டின் முதல், சர்வதேச வாகன போக்குவரத்து திறன் மாநாடு நடக்கஉள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். அப்போது, 'ஒரு நாடு; ஒரு கார்டு' திட்டம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட உள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கிலான இந்த திட்டம், பல்வேறு பொது போக்குவரத்து வசதி களை ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைத்தல், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல அம்சங்கள், இந்த திட்டத்தில் இடம் பெற்று உள்ளன. என அவர் கூறினார்.

இந்த  'ஒரு நாடு; ஒரு கார்டு' திட்டத்தின் பயன்களாக சொல்லப்படுபவை இவை தான்....

• 'ஒரு நாடு; ஒரு கார்டு' திட்டம், மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துகிறது; அலைச்சலை போக்குகிறது

• பல்வேறு போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த முடியும்

• 'டெபிட் கார்டாக' பயன்படுத்த முடியும்

• போக்குவரத்துக்கான மக்களின் செலவுகள் 

இந்த கார்டை வேறு எந்த எந்த கார்டுடன் இணைக்க சொல்லுவார்களோ...அதற்கு என்னென்ன வழிமுறைகள் வகுப்பார்களோ என இப்போதே பலர் புலம்ப ஆரம்பித்தாலும் , இது பலன் அளிக்க கூடியது தான் என அதிகாரிகள் தரப்பில் உறுதியாக சொல்லப்படுகிறது.

 
 

Advertisment

English Summary

New "card" - a state of the Modi government; A card 'plan soon ...

 
NewsFast Logo