Advertisment

Punnagai Logo

புதிய கிரகம் - சாதித்த "இந்திய விஞ்ஞானிகள்"

 600 ஒளி ஆண்டுகள் தூரத்தில், பூமியை விட 6 மடங்கு பெரிய புதிய கிரகம், ஒன்றை இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுகண்டறிந்து சாதனை படைத்துள்ளனர்.

அகமதாபாத்தில் உள்ள Physical Research Laboratory(PRL) வானியல் மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர், பூமியை விடவும் 27 மடங்கு எடை கொண்டதும், பூமியின் ஆரத்தைக் (Radius) காட்டிலும் 6 மடங்கு பெரியதும் ஆன கிரகம் ஒன்றை கண்டறிந்துள்ளனர். அது சூரியனைப் போன்ற ஒரு சூடான கோளத்தை சுற்றிவருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இது,முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட, PRL Advance Radial-velocity Abu-Sky Search’ (PARAS) என்ற நிரல் வரைவியைக் கொண்டு இந்த  கிரகத்தை விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. இதில் 1.2 மீட்டர் நீளம் கொண்ட தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது 

இந்த கிரகத்திற்கு EPIC 211945201b அல்லது K2-236b என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர், இந்த கிரகம் சுற்றி வரும் சூரியன் போன்ற கோளுக்கு EPIC 211945201 அல்லது K2-236 என்று பெயரிட்டுள்ளனர்.

புதிய கோள், வெப்பக் கோளுக்கு மிக அருகிலேயே சுற்றிவருவதால், அதன் மேற்பரப்பு 600 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்டுள்ளது. உதாரணமாக பூமி, சூரியனை சுற்றி வரும் தூரத்தை விட 7 மடங்கு குறைந்த தூரத்தில் இந்த புதிய கோள் அதன் துணைக்கோளை சுற்றிவருகிறது. இதன் காரணமாக உயிர்கள் வாழத் தகுதியற்றதாக இந்த கிரகம் உள்ளது.

தற்போது இந்த கண்டுபிடிப்பின் மூலம் மிகவும் முக்கியமான கிரகங்களை கண்டறிந்துள்ள ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.

இது தொடர்பாக கடந்த 1.5 ஆண்டுகள் தீவிரமான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தற்போது இத்தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நிகழ்காலத்தில் உலகில் இது போன்று துல்லியமாக கிரகங்களில் எடை மற்றும் விட்டத்தை கண்டறியும் தொழில்நுட்பக் கருவி 23 மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 

Advertisment

English Summary

New planet - achieved "Indian scientists"

 
NewsFast Logo