Advertisment

Punnagai Logo

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அணியுடன் கூட்டணி இல்லை - ஆம் ஆத்மி ஆணித்தரம்..!

ஆம் ஆத்மி கட்சி, அடுத்து வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இணையப்போவதில்லை என்றும், தனித்து போட்டியிடப்போவதாகவும்  அறிவித்துள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் ஆம் ஆத்மி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

 ஆனால், அரவிந்த் கேஜ்ரிவாலை தொலைபேசியில் ராகுல் காந்தி தொடர்பு கொண்டு ஆதரவு கேட்கும் பட்சத்திலேயே அது பற்றி யோசிக்க இயலும், என ஆம் ஆத்மி கட்சி நிபந்தனை விதித்தது. இதை ஏற்க ராகுல் காந்தி மறுத்துவிட்டார்.

இந்நிலையில்  மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலிலும் ஆம் ஆத்மி நடுநிலை வகித்தது. குறிப்பிடத்தக்கது.

தற்போது  மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக ஆம் ஆத்மி கட்சி தற்போது அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

‘‘டெல்லியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் மத்திய அரசு முடக்குகிறது. ஹரியாணா பாஜக அரசை விட டெல்லி அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்தே போட்டியிடும். எதிர்கட்சிகளின் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பில்லை. நாட்டின் வளர்ச்சியில் எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு எந்த பங்கும் இல்லை. எனவே தான் அந்த கூட்டணியில் இணையும் திட்டம் இல்லை’’ எனக் கூறினார்.

 
 

Advertisment

English Summary

No coalition with Congress party in Lok Sabha polls - Aam Aadmi

 
NewsFast Logo