Advertisment

Punnagai Logo

இந்தியாவில் யாரிடமும் கருப்பு பணம் இல்லை...! - 99.3 சதவீத செல்லாத ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியது..!

புதுடில்லி, 'செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில், 99.3 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளன' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

முன்னதாக பிரதமர் மோடியால் 'புழக்கத்தில் இருந்த, 500 மற்றும்1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, 2016 நவம்பர், 8ல் அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக புதிய, 500 மற்றும்2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளை வங்கிகளில் திருப்பி செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.அவ்வாறு திருப்பி செலுத்தப்பட்ட பழைய, செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி நடந்து வந்தது.

Image result for reserve bank of india

இந்நிலையில்,தற்போது 'ஏற்கனவே புழக்கத்தில் இருந்த இந்த நோட்டு களில், 99.3 சதவீதம் திரும்பியுள்ளன' என, ரிசர்வ் வங்கி தற்போது தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை வெளி யிடப் பட்டுள்ளது. அதில், செல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்து கூறப்பட்டுள்ளதாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான சமயத்தில் ,ரூ. 15.42 லட்சம் கோடி மதிப்புள்ள,500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. திருப்பி செலுத்தப்பட்ட அந்த நோட்டுகளை எண்ணும் பணி மிகவும் துல்லியமாக நடந்தது. அனைத்து நோட்டுகளையும் எண்ணும், சரி பார்க் கும் பணிகள் முழுமையாக முடிந்தன. 

அதன்படி, 15.31 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள செல்லாத ரூபாய் நோட்டுகள் திரும்பியுள்ளன. அதாவது, 99.3சதவீத நோட்டுகள் திரும்பி உள்ளன. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், புதிய, 500 மற்றும் 2,௦௦௦ ரூபாய் நோட்டுகள் மற்றும் பிற ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க, 2016 - 17ம் ஆண்டில், 7,965 கோடி ரூபாய் செலவிடப் பட்டது.

அதற்கு முந்தைய ஆண்டு, 3421 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதேபோல், 2017 - 18 ம் ஆண்டில், 4912 கோடி ரூபாய் செலவில், புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.இவ்வாறு ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து மோடி அரசு எதிர்கட்சிகளால் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

'பிரதமர் நரேந்திர மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, மிகப் பெரிய தோல்வி என்பதையே, ரிசர்வ் வங்கியின்அறிக்கை உணர்த்து கிறது' என, காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்து உள்ளது.இதுகுறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில் கூறி யுள்ளதாவது:கடந்த2017 சுதந்திர தின உரையின் போது, செல்லாத ரூபாய் நோட்டுகள் மூலம், அரசுக்கு, ரூ.3 லட்சம் கோடி வரும் என, பிரதமர்

கூறியிருந்தார். அது மிகப் பெரிய பொய் என்பதற்காக, தற்போது மோடி மன்னிப்பு கேட் பாரா? என அதில், அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான சிதம்பரம், டுவிட் டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ள தாவது:ரிசர்வ் வங்கி அறிவிப்பின் படி, ரூ.13 ஆயிரம் கோடி பல கோடி ரூபாயை நாடு இழந்தது; பலர் உயிரிழக்க நேரிட்டது; தொழில்கள் முடங்கின; லட்சக் கணக்கானோர் வேலையை இழந்தனர். இவ்வாறு அதில், அவர் கூறியுள்ளார்.

Image result for demonetisation impactsஇதற்கிடையே, பொருளாதார விவகாரங்களுக் கான செயலர், கார்க் கூறுகையில் :"செல்லாத நோட்டு அறிவிப்பு திட்டத்தால் கறுப்பு பணம், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பது ஆகியவற்றை தடுப்பது, கள்ள ரூபாய் நோட்டை ஒழிப்பது போன்ற நோக்கங்கள் நிறைவேறியுள்ளன".என்றார் .

 
 

Advertisment

English Summary

No one in India has black money ...! - 99.3% of non-invoice banknotes returned to the Reserve Bank!

 
NewsFast Logo