Advertisment

Punnagai Logo

ராமர் கோயில் கட்டுவோம் - உ.பி. காவல் அதிகாரியின் உறுதிமொழியால் சர்ச்சை...

உத்தரபிரதேசத்தின் லக்னோ நகரில் உள்ள இடத்தில் ராமர் கோயில் கட்டுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, அயோத்தியில் கோயில் கட்டியே தீருவோம் என உறுதி எடுத்துக்கொண்டனர். 

இதில், விசயம் என்னவென்றால், இந்த படத்தில் இடது புறத்தில் கோட், சூட் அணிந்து நிற்பவர் உத்தரபிரதேச மாநிலத்தின் காவல்துறை உயரதிகாரியாவார். சூர்ய குமார் சுக்லா என்ற இவர், 1982-ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். 

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய ஒரு அரசு அதிகாரி, இதுபோன்று ஒரு தரப்பிற்கு சாதகமாக நடந்து கொள்வது அம்மாநிலத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் யோகி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இந்த பிரச்சனை பூதகரமானவுடன், சூர்யகுமார் சுக்லா அந்தர் பல்டி அடித்தார். தாம் அதுபோன்று கூறவில்லை என்றும், தமது கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார். 

 
 

Advertisment

English Summary

On Video, Top UP Police Officer Pledges To Build Ram Temple

 
NewsFast Logo