Advertisment

Punnagai Logo

கோடீஸ்வரனே கோடீஸ்வரனாகிறான்: கொந்தளிக்கும் சாமானியன்

 

இந்தியா ஏழை நாடாகத்தான் உலகம் முழுவதும் அறியப்பட்டிருக்கிறது. அது தான் உண்மையும் கூட. பெரும்பாலான மக்கள் ஏழைகள்தான். ஆனால், கோடீஸ்வரர்களாக இருப்பவர்களே, மேலும் மேலும் செல்வந்தர்கள் ஆகி வருகின்றனர். அதற்கு உலக பொருளாதார கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஆக்ஸ்பாம் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையே சாட்சி.

இந்தியாவில் இருக்கும் ஒரு சதவீத கோடிஸ்வரர்களின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டு மட்டும், ஒவ்வொரு நாளும் 2,200 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக அந்த் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் எல்லா விவரங்களுமே, ஏழை-சாமானிய மக்களுக்கு அடி வயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டுபவைதான்.

அந்த அறிக்கை விவரம் வருமாறு:

2018ல், இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 39 சதவீத அதிகரித்துள்ளது. இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ஒவ்வொரு நாளும் 2,200 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது. சுமார் 13.6 கோடி இந்தியர்கள், கடந்த 2004 முதல் ஏழைகளாகவே உள்ளனர். இந்திய பொருளாதாரத்தின் சீரற்ற நிலையால் வறுமைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கியதுடன், பொருளாதார நிலையை சீர்குலைத்து, உலகம் முழுவதும் சாமானிய மக்களின் கோபத்தை அதிபடுத்தி உள்ளது.

நாட்டின் மொத்த செல்வ வளத்டில் 77.4 சதவீதம், இந்திய கோடீஸ்வரர்களாக இருக்கும் 10 சதவீத மக்களிடம் மட்டுமே உள்ளது. ஒரு சதவீதம் கோடீஸ்வரர்களிடம் 51.33 சதவீதம் சொத்துக்கள் உள்ளன. கீழ்மட்டத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள் தொகையான 60 சதவீதம் மக்களிடம் வெறும் 4.8 சதவீதம் செல்வ வளம் மட்டுமே உள்ளது. 2018 முதல் 2022 வரை ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 70 புதிய கோடீஸ்வரர்கள் உருவாகக்கூடும். இந்த பொருளாதார சமநிலையின்மையால், இந்தியாவில் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

புதிதாக, இந்தியாவில் 18 கோடீஸ்வரர்கள் உருவாகி உள்ளனர். அவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு முதல் முறையாக 28 லட்சம் கோடி ரூபாயை எட்டி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் நாட்டின் மருத்துவ சுகாதாரம், தூய்மை, குடிநீருக்காக செலவிடம் 2,08,166 கோடி ரூபாய், இந்திய கோடீஸ்வரர்களில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பான 2.8 லட்சம் கோடி ரூபாயை விட குறைவு.

இவ்வாறு அந்த அறிக்கையில் அதிர்ச்சி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

 
 

Advertisment

English Summary

pauper reaction

 
NewsFast Logo