Advertisment

Punnagai Logo

தொடக்கக்கல்வி மாணவர்கள் ஆதாரை பதிவு செய்ய உத்தரவு...

ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் ஆதார் எண்களை பதிவு செய்ய தொடக்கப் பள்ளிகளுக்கு அதன் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், மத்திய அரசு அதனை கேட்பதாகத் தெரியவில்லை. அதே மத்திய அரசு, இஸ்லாமியர்களுக்கான ஹஜ் மானியத்தை தடை செய்ய உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது, அதனால், மானியத்தை ரத்து செய்கிறோம் என்று சொல்கிறது.

இப்படி, அனைத்திலும் மத்திய பாஜக அரசு முன்னுக்குப்பின் முரணாகவே செயல்படுகிறது. இந்நிலையில், ஊராட்சி, நகராட்சி, ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் ஆதார் எண்களை பதிவு செய்யும்படி தொடக்கப்பள்ளிகளுக்கு அதன் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்த ஆதார் எண்களை EMIS இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்யும் பணிகளை விரைந்து செய்து முடிக்கும்படியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

primary schools students adhaar no enrolled must EMIS

 
NewsFast Logo