Advertisment

Punnagai Logo

மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க பிரதமர் மோடியின் முயற்சி.

பிப்ரவரி 16-ம் தேதி காலை 11 மணிக்கு பிரதமர் உரையாற்றவுள்ளார். சுமார் 50 முதல் 55 நிமிடங்கள் வரை பிரதமரின் உரை நீளும் எனத் தெரிகிறது.தேர்வு பயத்தை வெல்வது எப்படி...? என்பது குறித்த 

 மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்  அனைத்து பள்ளி, கல்லூரிகளும் பிரதமரின் உரையை அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் கேட்பதற்கு வழிவகை செய்யுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்  மாநில அரசுகளுக்கு கோரிக்கை  விடுத்துள்ளது.

இத்துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, "பிரதமர் மோடியின் உரை பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும் நேரலையாக நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்குச் சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே வேளையில் மாணவர்கள் இதை கண்டிப்பாக கேட்டாகவேண்டும் என்ற எவ்வித நிர்பந்தமும் இல்லை" என்றார்.

 பிரதமர் மோடி.. தேர்வை எதிர்கொள்வதற்கான 25 யுத்திகளை தனது  எக்ஸாம்   வாரியர்ஸ் ( Exam Warriors ) என்ற புத்தகத்தில் வலியுறுத்தியுள்ளார். அதன்  அடிப்படையில் உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது..

 
 

Advertisment

English Summary

Prime Minister Modi's attempts to overcome Ezam fear

 
NewsFast Logo