Advertisment

Punnagai Logo

சிபிஐ இயக்குநரை இடம் மாற்றுவதில் மோடிக்கு ஏன் இந்த அவசரம்  - ராகுல் கேள்வி 

உச்ச நீதிமன்றம் பணியில் அமர்த்திய அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து தூக்கி அடிப்பதில் பிரதமர் மோடிக்கு ஏன் இவ்வளவு தலைபோகிற அவசரம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

சி.பி.ஐ. இயக்குனரின் அதிகாரத்தை பறிக்கும் விதத்தில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது. அவர் தொடர்ந்து பணியாற்றலாம் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், "அலோக் வர்மாவுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் சி.பி.ஐ. இயக்குனரை தேர்வு செய்து நியமிக்கும் தேர்வுக் குழுதான் எடுக்க வேண்டும்" என்று கூறியது.

இந்நிலையில் அலோக் வர்மாவின் மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க நியமனக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  அப்போது சி.பி.ஐ. இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்க நியமனக்குழு முடிவு செய்யப்பட்டது.  இதனையடுத்து அலோக் வர்மா தீயணைப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் இந்த தூக்கியடிக்கும் நடவடிக்கையை ராகுல் காந்தி கண்டித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் பதிவிட்டிருப்பதாவது : 

"1. உச்ச நீதிமன்றம் பணியில் அமர்த்திய அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து தூக்கி அடிப்பதில் பிரதமர் மோடிக்கு ஏன் இவ்வளவு தலைபோகிற அவசரம்? 
2. சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, தேர்வுக் குழு முன்பாக ஆஜராகி தனது நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? 
இந்த 2 கேள்விக்கும் ஒரே பதில்தான் : ரபேல் ஊழல் விசாரணையை நினைத்து மோடி பயப்படுவதுதான்"  என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். 


 

 
 

Advertisment

English Summary

Rahul criticises removal of CBI Director

 
NewsFast Logo