Advertisment

Punnagai Logo

அரசுக்கல்லூரி கேட்டு போராடிய மாணவர்கள் மீது தடியடி...

ராஜஸ்தானில் அரசுக்கல்லூரி வேண்டும் என்று போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகார் ஃபதேபூர் என்னும் பகுதியில் உள்ள மக்கள் மேற்படிப்புக்காக வேறு மாவட்டங்களுக்குச் சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால், தங்கள் பகுதியில் அரசுக்கல்லூரி கட்டித்தர வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிகார் ஃபதேபூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த முதலமைச்சர் வசுந்தரா ராஜேவை, மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பினர். முதல்வருக்கு கறுப்புக்கொடியும் காட்டப்பட்டது.

இதையடுத்து, மாணவர் அமைப்பினர் மீது காவல்துறையினர் தடியடியை பிரயோகித்தனர். இதனால், மாணவர்கள் அங்கும் இங்கும் கலைந்து ஓடினர். பலருக்கு காயம் ஏற்பட்டது. போராட்டத்தை தூண்டி விட்டதாகக்கூறி, 6 மாணவர்களை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.

 
 

Advertisment

English Summary

Rajasthan students protest police lathicharge

 
NewsFast Logo