Advertisment

Punnagai Logo

ரிசர்வ் வங்கி கவலை...! - ஏ.டி.எம், மற்றும் ஆன்லைன் மோசடி : வங்கிகளுக்கு ரூ.110 கோடி இழப்பு..!

புதுடில்லி; 'கடந்த, 2017 - 18ம்நிதியாண்டில், ஏ.டி.எம்., மற்றும் 'ஆன்லைன்' மோசடி சம்பவங்களால், வங்கிகளுக்கு, 109.75 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுஉள்ளது' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து, ஆர்.பி.ஐ., வெளியிட்டு உள்ள அறிக்கையில், 

:நாடு முழுவதும், 2017 - 18ம் நிதியாண்டில், 972 மோசடி சம்பவங்கள் நடந்தன. இதில் பெரும்பாலும், ஏ.டி.எம்., இயந்திரங்களில் இருந்து, பணத்தை திருடும் சம்பவங்கள் நடந்துள்ளன.கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த, ஏ.டி.எம்., கொள்ளை சம்பவங்களால், வங்கித் துறைக்கு, 168.74 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டில், அதிக பட்சமாக, பீஹார் மாநிலத்தில் நடந்த, வங்கி மற்றும் ஏ.டி.எம்., மோசடிகளால், 3.35 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும், அதிகளவிலான, ஏ.டி.எம்., மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன.கடந்த நிதியாண்டில், ஏ.டி.எம்., மற்றும் ஆன்லைன் மோசடி சம்பவங்களால், வங்கிகளுக்கு, 109.75 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

Reserve Bank Concerns ... - ATM and online fraud: loses Rs.1 crore for banks

 
NewsFast Logo