ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாம்பூர் முஸ்லிம் கல்வி நிறுவனம் நடத்தி வரும் தனியார் பள்ளியில் தாரிக் பாட் மற்றும் சுமையா பஷீர் என்ற ஆசிரியர் ஆசிரியை பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவரும் நவம்பர் 30-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு வாழ்த்துக்கூற வேண்டிய பள்ளி நிர்வாகம், இருவரையும் அழைத்து பணிநீக்கம் செய்யப்படுவதாகவும், வேறு இடத்திற்கு சென்று பணிபுரியுங்கள் என்று தெரிவித்துள்ளது. இதனால், திருமணம் ஆன மகிழ்ச்சியில் இருந்த ஆசிரியர் தம்பதி, தற்போது வேலையில்லாமல் கவலையில் ஆழ்ந்துள்ளது.
பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்வதாகவும், இதுபோன்ற ரொமான்டிக் திருமணங்களால், அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர் தம்பதி கூறியது.
பள்ளியின் நிர்வாகியைச் சந்தித்து, தங்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றதுதான் என்று விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும், அவர்களுக்கு மீண்டும் பணிவழங்க, முஸ்லிம் பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை.
தாங்கள் திருமணம் செய்து கொண்டதில், அப்படி என்ன தவறு உள்ளது என்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர் தம்பதியினர் பள்ளி நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
English Summary
'Romance may affect students': J&K school sacks teacher couple on wedding day