Advertisment

Punnagai Logo

மலையாள மண்ணை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்- பாலக்காட்டில் மீண்டும் தேசியக்கொடி ஏற்ற திட்டம்

கேரளாவில் மீண்டும் தேசிய கொடியேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத்,  பாலக்காடு மாவட்டத்தில், அரசு உதவி பெறும், கர்ணகி அம்மன் பள்ளியில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, தேசியக்கொடி ஏற்றினார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பள்ளி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மட்டுமே, தேசியக் கொடி ஏற்ற வேண்டும்' என்ற விதிகளுக்கு மாறாக மோகன் பாகவத் கொடியயேற்றியது சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து  மாவட்ட  ஆட்சியர் மேரிகுட்டி, விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில் பாலக்காட்டில் மூன்று நாள் ஆர்.எஸ்.எஸ். முகாம் நடக்கிறது. இதில் பங்கேற்க மோகன் பாகவத் வருகை தர உள்ளார். ஜனவரி 26 ஆம் குடியரசு தினத்தன்று அங்குள்ள பள்ளி ஒன்றில் தேசிய கொடி ஏற்ற திட்டமிட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
 

Advertisment

English Summary

RSS target to Malayalam-Planning to re-nationalize in Palakkad

 
NewsFast Logo