Advertisment

Punnagai Logo

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகொலை - திரிசூரில் பெரும் பதற்றம்

பினராயி விஜயன் ஆட்சி செலுத்தும் கேரளாவில் இடதுசாரிகளுக்கும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சிலர் கொல்லப்பட்டதைக் கண்டித்து பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் கண்ணூரில் அண்மையில் பேரணி நடத்தப்பட்டது.

இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இடையேயான மோதல் போக்கு நீருபூத்த நெருப்பமாக புகைந்து வரும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர் ஒருவரின் கொலை வழக்கில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் திரிசூரில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளார்.

ஆனந்தின் படுகொலையைக் கண்டித்து பா.ஜ.கவினர் வன்முறையில் ஈடுபடலாம் என்று அஞ்சப்படுவதால் திரிசூர் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

RSS Worker Killed In Keralas Thrissur

 
NewsFast Logo