Advertisment

Punnagai Logo

பள்ளி மாணவனை "டீ" ஊற்றிக்கொடுக்க வைத்த பாஜக கல்வி அமைச்சரின் அநாகரீக செயல்....

குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களை பணிக்கு அமர்த்துதல், வேலை வாங்குதல் உள்ளிட்டவை சட்டவிரோதம் என்பது தெரிந்தும், பள்ளி மாணவன் ஒருவனை பாஜக கல்வி அமைச்சர் டீ ஊற்றிக்கொடுக்க கொடுக்க சொன்ன நிகழ்வு மத்தியபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் உள்ள பல்ராங் சமாரோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில கல்வித்துறை அமைச்சர் விஜய் ஷா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின், இடையே பள்ளி மாணவன் ஒருவன் அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு டீ ஊற்றிக்கொடுத்து சேவகம் புரிந்துள்ளான். ஒரு மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில், மாணவனின் எதிர்காலத்தை கருதி, இதுபோன்று செய்யக்கூடாது என்று கூறியிருக்க வேண்டும் என்றும், அதனை விடுத்து, அவரும் மாணவன் ஊற்றிக் கொடுத்த டீயை குடித்து எந்தவித அக்கறையும் இல்லாமல் செயல்படுவதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 
 

Advertisment

English Summary

School students made to serve tea and snacks at State Govt's 'Balrang Samaroh' in Bhopal.

 
NewsFast Logo