Advertisment

Punnagai Logo

தேர்வுக்கட்டணம் செலுத்த முடியாத மாணவி வீட்டில் தற்கொலை... 

ஐதராபாத் மாநிலம் மால்கஞ்கிரியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு பயிலும் மாணவி, நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் தனது தாய்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் என்னை மன்னித்து விடுங்கள் அம்மா என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், தேர்வு கட்டணம் செலுத்தாததால், பள்ளியை விட்டு மாணவி வெளியேற்றப்பட்டதாகவும், அதனால், மனமுடைந்து தனது வீட்டிற்கு திரும்பியவுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. 

வீட்டிற்கு திரும்பியதும் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வை தனது சகோதரியிடம் சொல்லி அழுதுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, ஐதராபாத் போலீசாரிடம் பாதிக்கப்பட்ட பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 

 

 
 

Advertisment

English Summary

'Sorry Mom,' Wrote Hyderabad Girl Found Hanging After School Shaming

 
NewsFast Logo