Advertisment

Punnagai Logo

காசநோயாளிகளுக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை...

டி.பி. என்னும் காசநோயினால் இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 28 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 17 லட்சம் பேர் மட்டுமே உரிய சிகிச்சை பெறுகின்றனர். காசநோயை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, நாடு முழுவதும் காசநோயால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் பேருக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வகுத்துள்ளது.

இதற்கு செலவு நிதி கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏழ்மையான காசநோயாளிகள் தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துமிக்க உணவுகளை வாங்கி சாப்பிட முடியும். மேலும், போக்குவரத்து செலவுக்கும் பயன்படுத்த முடியும் என்றார்.

காசநோயை 2025-ம் ஆண்டிற்குள் 90 சதவீதம் ஒழிக்கும் விதமாக, இத்திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் செயல்படுத்த உள்ளது. மேலும், திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின்படி 2030-ம் ஆண்டிற்குள் காசநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையை 95 சதவீதம் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 
 

Advertisment

English Summary

TB patient gets soon Rs.500 per month for treatment

 
NewsFast Logo