Advertisment

Punnagai Logo

கட்சிகளின் வருமானம்- தலைசுற்றவைக்கும் அதிர்ச்சித் தகவல்

மாநில கட்சிகள், 2016 - 17ம் நிதியாண்டில் பெற்ற மொத்த வருமானத்தில், 22 சதவீதம், அடையாளம் தெரியாத வகையில் பெறப்பட்டுள்ளதாக, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் சார்பில், நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் பெற்ற, 37 மாநில கட்சிகளின் வருமான வரி கணக்கு தாக்கல் விபரம், அவர்களின் சொத்து கணக்கு விபரங்களின் அடிப்படையில், ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அதில், 29 கட்சிகளின் சொத்துகள் பற்றிய விபரங்கள் கிடைத்தன. மீதமுள்ள, எட்டு கட்சிகளின் வருமானம், சொத்து விபரங்கள் கிடைக்கவில்லை. அந்த வகையில், 2016 - 17ம் நிதியாண்டில், 29 மாநில கட்சிகளின் மொத்த வருவாய், 347.74 கோடியாக உள்ளது.

அதில், சொத்து விற்பனை, உறுப்பினர் கட்டணம், வங்கி, 'டெபாசிட்' வட்டி வருமானம், புத்தக விற்பனை உள்ளிட்ட வகையில், 179.37 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது, மொத்த வருமானத்தில், 51.58 சதவீதம்.

சிவசேனா, அகாலி தளம், சமாஜ்வாதி, எம்.என்.எஸ்., ராஷ்ட்ரீய லோக்தளம் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் வருமானத்தில், 83 சதவீத தொகையை, கார்ப்பரேட்டுகள், தொழில் நிறுவனங்களிடமிருந்து பெற்றதாக தெரிவித்துள்ளன.

மேலும், 16 மாநில கட்சிகள், தங்கள் மொத்த வருமானத்தில், 83 சதவீதத்தை, கட்சி

உறுப்பினர்களி டம் இருந்து பெற்றதாக தெரிவித்துள்ளன.

மாநில கட்சிகளின் மொத்த வருமானத்தில், 22 சதவீத தொகை, அதாவது, 77 கோடி ரூபாய், அடையாளம் தெரியாத வகையில் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

The income of the parties - the emotionally shocking information

 
NewsFast Logo