ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், வங்கிகளின் வராகடன் அதிகரிப்புக்கு, தகுதி இல்லாத, ஊழல் மலிந்த வங்கிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களும் தான் காரணம் என,குற்றம்சாட்டியுள்ளார். வங்கிகளின் வராகடன் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது.
இது குறித்து மதிப்பீடுகளுக்கான லோக்சபா குழுவுக்கு ரகுராம் ராஜன் எழுதிய கடிதத்தில், வங்கிகளின் வரா கடன் அதிகரிப்புக்கு, 2006ம் ஆண்டு முதலே சூழ்நிலை உருவாகி விட்டதாக கூறியுள்ளார். கடன் பெற்றவர்களுக்கு காலஅவகாசம் வழங்கி, கடன் வசூல் செய்வதில் வங்கிகள் சுணக்கம் காட்டியதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், மன்மோகன் சிங் பிரதமராக 2வது முறையாக பதவியேற்ற பிறகு ஊழல் புகார்களால் பல்வேறு விஷயங்களில் கடினமான முடிவுகள் எடுப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டியதால் கடன் வசூலும் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வங்கிகள் பிரச்னையை நன்கு உணர்ந்து இருந்த போதும் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைக்கும் அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார்
English Summary
The reason for the UPA crisis is the rise in the banking sector - the former Governor of Reserve Bank Raghuram Rajan