Advertisment

Punnagai Logo

ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு- மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுகிறது

 

 வங்கிக் கணக்கு, செல்போன் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆம்  தேதிக்கு தள்ளிபோகும் என்று தெரிவந்திருக்கிறது.

அரசின்  நலத் திட்டங்களை பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என்று கோரி  தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. 

இதனிடையே, செல்போன், வங்கி சேவைகளை பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.  வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதியும், செல்போன் எண்ணுடன் இணைக்க பிப்ரவரி 6 ஆம்  தேதியும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31 ஆ ம் தேதி வரை நீட்டிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு, அரசியல் சாசன அமர்விடம் தெரிவித்திருக்கிறது.

இதன்மூலம் ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீட்டிக்கப்படும் என தெரிகிறது.

 
 

Advertisment

English Summary

timeline for aadhar linking was extended upto march 31

 
NewsFast Logo