Advertisment

Punnagai Logo

இடியாப்ப சிக்கலில்..சோனியா, ராகுல் .

புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்புடைய காங்., தலைவர் ராகுல், சோனியா ஆகியோரின் வருமான வரி கணக்குகளை மீண்டும் விசாரிக்க கூடாது என கோரிய மனுக்களை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, இது அவர்கள் இருவருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Image result for nehru on national herald

நாட்டின் முதல் பிரதமர் நேருவால் 1938ல் துவக்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ் இந்த பத்திரிகை உட்பட மேலும் சில பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு வந்தன. 

Image result for nehru on national heraldஇருப்பினும்,தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்ததால், 2008 ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. எனினும், காங்கிரஸ் கட்சியிடம் பெற்ற 90 கோடி ரூபாய் கடனுதவியுடன் அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம் நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்க முயன்றது. இந்நிறுவனத்திற்கு, 2,000 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளன.

முன்னதாக 2010ம் ஆண்டு யங் இந்தியா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில், சோனியா, ராகுல் உள்ளிட்ட சில காங்., தலைவர்கள் உறுப்பினராக உள்ளனர். அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம், காங்கிரசிடம் இருந்து பெற்ற 90 கோடி ரூபாய் கடனை திரும்ப வசூலிக்கும் உரிமையை யங் இந்தியா அமைப்பு பெற்றது. இதை முன்னிறுத்தி, அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கிட்டத்தட்ட அனைத்து பங்குகளும், 50 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்ட யங் இந்தியா அமைப்புக்கு கை மாறியது. இதன்மூலம் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் யங் இந்தியா அமைப்புக்கு கை மாறும் சூழ்நிலையும் உருவானது. 

Image result for subramanian swamy

இந்நிலையில், இதை எதிர்த்து பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து வருமான வரித்துறையும் நடவடிக்கையில் இறங்கியது. ராகுலின் 2011 - 12 ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கில் யங் இந்தியா அமைப்பில் ராகுலுக்கு உள்ள பங்குகள் மூலம் கிடைத்த வருவாய் 68 லட்சம் ரூபாய் என முதலில் கணக்கிடப்பட்டது தவறு, அவரது வருவாய் 249 கோடி ரூபாய் என கூறியது. 

எனவே, ராகுல், சோனியா உள்ளிட்ட காங்., தலைவர்களின் 2011 - 12ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை மீண்டும் விசாரிக்க வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து ராகுல், சோனியா சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தான் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது ராகுல், சோனியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

இப்பிரச்னையை கையில் எடுக்க பா.ஜ., தீவிரமாக களம் இறங்க உள்ளதாக தெரிகிறது..

 
 

Advertisment

English Summary

Trouble .. Sonia, Rahul.

 
NewsFast Logo