Advertisment

Punnagai Logo

வேண்டாம் என்றாலும் துடிக்குறாங்க..! - இந்தியாவை பற்றி "ட்ரம்ப்"பின் 'டூமச்' கிண்டல்..!

கல்யாண பந்தியில் "உட்காராதே" என விரட்டினால்..அவன் "இலை கிளிஞ்சிருக்கு, மாத்தி கொடுங்க" என்று சொல்லுவதாக ஒரு பழமொழியை கிராமங்களில் சொல்லுவது உண்டு. கிட்ட தட்ட அதே போல் ஒரு விமர்சனத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மீது வைத்துள்ளார்.

நியூயார்க்: வேண்டாம் என்றாலும் நம்முடன் வர்த்தகம் செய்ய இந்தியா துடிக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிண்டல் செய்துள்ளார். 

சமீப காலமாக அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. 

மேலும் இதன் காரணமாக இந்நாடுகளுடன் போட்டி போட்டு பொருட்களுக்கு வரிவிதிக்கும் வகையில் அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது ஒரு வர்த்தக போட்டியை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் வேண்டாம் என்றாலும் நம்முடன் வர்த்தகம் செய்ய இந்தியா துடிக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிண்டல் செய்துள்ளார். 

இது குறித்து வாஷிங்டனில் நடந்த தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில்  ட்ரம்ப் பேசுகையில்,

இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து நல்லுறஉடனேயே இருந்துவருகிறது.. இருப்பினும் வர்த்தக செயல்பாடுகளில் அமெரிக்காவின் உரிமையை நாங்கள் இனி விட்டுக் கொடுப்பதில்லை. பல ஆண்டுகளாக அவர்களுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டு விட்டது. இனி அதைத் தொடர்வதாக இல்லை. 

குறிப்பாக அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு நாங்கள் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளோம். ஆனாலும், அவர்கள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யவே விரும்புகிறார்கள். வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கிக் கொள்வதற்காக இந்தியாவில் இருந்து சமீபத்தில் கூட பேசினார்கள். ஆனால் நாம் அவசரப்படவில்லை. பொறுமையாக கவனித்து வருகிறோம். 

முந்தைய ஆட்சியாளர்களின் காலத்தில் வேண்டுமானால் பல நாடுகளிடமும், அமெரிக்கா தனது உரிமையை விட்டுக் கொடுத்திருக்கலாம். இனி அந்த சூழல் இல்லை. மற்ற நாடுகளின் சாதுர்யங்கள் எதுவும் ட்ரம்பிடம் பலிக்காது.

என அவர் பேசினார். 

 
 

Advertisment

English Summary

"Trump"s too much criticism about India

 
NewsFast Logo