Advertisment

Punnagai Logo

செம்மரம் வெட்ட வந்தால் சுட்டுத்தள்ளுவோம் - ஆந்திர போலீசார் பகிரங்க எச்சரிக்கை

ஆந்தராவுக்குள் செம்மரம் வெட்ட யார் வந்தாலும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்று அம்மாநில போலீஸ் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது..

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கூலி ஏழைத் தொழிலாளர்களை பண ஆசை காட்டி ஏஜெண்டுகள் செம்மரம் வெட்ட அவர்களை ஆந்திராவுக்கு அழைத்துச் செல்கின்றனர். 

இவ்வாறு சென்ற 20 தமிழர்களை ஆந்திர போலீசார் கடந்தாண்டு சுட்டுக் கொன்றது. இவ்விவாகரம் பூதாகரமாக வெடிக்க வழக்கு  நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆந்திராவில் பேருந்தில் பயணிக்கும் தமிழர்களையும் செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி அம்மாநில போலீசார் கைது செய்து வருகின்றனர். 

இதற்கிடையே திருப்பதியில் ஆந்திர மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காந்தாராவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, " செம்மரம் வெட்ட யார் வந்தாலும், அதனை தடுக்க துப்பாக்கிச்சூடு நடத்துவோம். செம்மரம் வெட்ட வருபவர்களையும் கடத்தல்காரர்களாக தான் பார்க்கிறோம்."

செம்மரம் வெட்ட வருபவர்களின் கைகளில் தமிழக நாட்டு துப்பாக்கிகள் தான் உள்ளன. ஜவ்வாது மலையை சேர்ந்தவர்கள் துப்பாக்கியுடன் செம்மரம் வெட்ட வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

 
 

Advertisment

English Summary

We Shoot Redwood Cutters - Andhra Police

 
NewsFast Logo