Advertisment

Punnagai Logo

கோடீஸ்வரர்களின் கடனை கண்டுகொள்ளாதது ஏன்..? மத்திய அரசை போட்டு தாக்கிய சிஐசி ஆணையர்..!

சிறிய தொகையை கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாத விவசாயிகளின் பெயரை வெளியிடும்போது, ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் தொழிலதிபர்களின் பெயரையும் அனைவர்க்கும் தெரியும் வண்ணம் அறிவிக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, மத்திய நிதித்துறை அமைச்சகம், மத்திய புள்ளியல்துறை மற்றும் திட்ட அமலாக்கம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ள  தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு , அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்....

''மிகச்சிறிய தொகையை வங்கிகளில் கடனாகப் பெற்று அதை முறையாக விவசாயிகள் திருப்பிச் செலுத்துகிறார்கள். இயற்கை இடர்ப்பாடுகளால் சில நேரங்களில் அந்தக் கடனை அவர்களால் திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்படும்போது அந்தக் கடனை வசூலிக்க அவர்களிடம் வங்கிகள் கடுமையாக நடந்து கொள்கின்றன. அவர்களின் பெயர்களை வெளிப்படையாக நாளேடுகளில் வெளியிட்டு, நோட்டீஸ்களில் தெரியப்படுத்தி அவர்களை அசிங்கப்படுத்துகின்றன.

ஆனால், ரூ.50 கோடிக்கும் அதிகமாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தும் தகுதி இருந்தும், கட்டாமல் இருக்கும் தொழிலதிபர்களின் பெயர்களை வங்கிகளும், மத்திய அரசும் வெளியிடுவதில்லை.

மேலும், அவர்களிடம் ’ஒன்டைம் செட்டில்மென்ட்’ என்ற பெயரில் வட்டி தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அளித்து அவர்களின் பெயரை வெளியிடாமல் அவர்களைப் பாதுகாக்கின்றனர். அவர்களின் மரியாதை கெட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் பெயர்களைக் கூட வெளிப்படையாக அறிவிப்பதில்லை.

ஆனால், கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுகளில் வங்கியில் சிறிய அளவில் கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாத மன உளைச்சலில், அவமானத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் உயிருக்கு உயிராக, தாய் போன்று நேசித்த நிலத்தில் தற்கொலை செய்திருக்கிறார்கள். ஆனால், மெத்தப்படித்த, தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் நாட்டை ஏமாற்றி வருகிறார்கள்.

ஆதலால், ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாவர்கள் பெயர்களையும் வெளியிட வேண்டும். மேலும், கொள்கைகளை வகுக்கும்போதும், முக்கிய முடிவுகளை எடுக்கும்போதும் அனைத்துத் துறைகளும் அது குறித்த விவரங்களை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியமாகும். பொதுமக்களின் பணத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பது கடமையாகும்''.

 தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலுவின் இந்த அறிக்கை பல அதிகாரிகளை திக்குமுக்காட வைத்துள்ளது.

 
 

Advertisment

English Summary

Why do not you notice the debtor's debt? CIC Commissioner Attacked by Central Government

 
NewsFast Logo