Advertisment

Punnagai Logo

டாடா நானோ காரின் உற்பத்தி நிறுத்தப்படுமா..?

உலகின் விலை குறைந்த கார் என சொல்லப்படும்  டாடா நானோவின் உற்பத்தி நிறுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு லட்சம் ரூபாய் விலைக்குள் நடுத்தர மக்களுக்கான கார் என கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டாடா நானோ கார், தொடக்கத்தில் வரவேற்பைப் பெற்றாலும் பின்னர் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அறிவிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது என்றும் அதன் கட்டமைப்பு மற்றும் வசதிகள் குறித்தும் குறை கூறப்பட்டது. டாடா நானோ கார்களின் விற்பனை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் உற்பத்தியும் குறைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 275 கார்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜூனில் ஒரே ஒரு டாடா நானோ கார் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதே போன்று கடந்த ஆண்டு ஜூனில் 25 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒரு கார் கூட ஏற்றுமதி செய்யப்படவில்லை.

 
 

Advertisment

English Summary

Will the production of Tata Nano be stopped?

 
NewsFast Logo