Advertisment

Punnagai Logo

பெண்கள் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் புதிய செயலி..!

பெண்கள் 2 மணி நேரங்கள் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பலர் இவற்றை தொழில்நுட்ப வளர்ச்சி என்றாலும், பலர் இவற்றை கலாச்சார சீரழிவு என கூறுகின்றனர். இந்நிலையில் தான் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்கும் செயலி ஒன்று மும்பை மற்றும் புனேவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் மற்றும் காதலன்/காதலியை தேர்ந்தெடுக்கும் செயலிகள் சில ஏற்கனவே இந்தியாவில் உள்ளன. இருப்பினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள செயலி, வாடகைக்கு ஆண் நண்பர்களை தேர்ந்தெடுக்க கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலி மூலம் பெண்கள் ஆண் நண்பர் ஒருவரை 2 மணி நேரம் வாடகைக்கு எடுக்க முடியும். அவருடன், அவர்கள் சினிமா, கோவில், உணவகம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லலாம். ஆனால் சொகுசு விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் வீட்டிற்கு செல்லக்கூடாது. அவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. இதெல்லாம் விதிமுறைகள்.

பெண்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக இந்த புதிய செயலி கொண்டு வரப்பட்டுள்ளதாக செயலியை தயாரித்துள்ளது என்பதை   நிறுவனம் தெரிவிக்கின்றது 

 
 

Advertisment

English Summary

Women can rent male friends - new processor

 
NewsFast Logo