Advertisment

Punnagai Logo

மைசூரில் பட்டு சேலை வாங்க பெண்கள் நீ..ண் ..ட..'கியூ'

கர்நாடக மைசூரில் , தள்ளுபடி விலையில் மைசூரு பட்டு சேலை வாங்க, ஏராளமான பெண்கள் வரிசையில் நிற்கும் காட்சி மக்களுக்கு மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

கர்நாடகாவில், சமீபத்தில் சுற்றுலா துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஷா ரா மகேஷ், வரமகாலட்சுமி விழா நாளில் இருந்து தள்ளுபடி விலையில் பட்டு புடவைகள் விற்கப்படும் என அறிவித்தார். 

அன்றைய தினம் கடைகளுக்கு சென்ற பெண்களுக்கு விலை குறைந்த புடவைகள் கிடைக்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கவுரி விழாவின் போது, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சேலை 4,500 ரூபாய்க்கு கிடைக்கும் வகையில் புதிய திட்டம் துவக்கப்படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்தார். 

கர்நாடகாவில் கவுரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து ஆர்வ மிகுதியால் , மைசூருவில் நாசர்பாத் என்ற இடத்தில் உள்ள கர்நாடக பட்டு ஆலை கழகத்தின் மைசூரு பட்டு கடை முன் நேற்று காலை( செப்., 11) 6 மணி முதல் முதல் பெண்கள் குவிய தொடங்கி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. மதியம் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த பிறகே புடவை விற்பனை துவங்கும் என கடை ஊழியர்கள் கூறினர். மேலும், 1,800 புடவைகளே கைவசம் உள்ளன. எனவே குலுக்கல் முறையில் விற்பனை செய்யலாம் எனவும் யோசனை தெரிவித்தனர். 

இருப்பினும் , இதை பெண்கள் ஏற்கவில்லை. யார் முதலில் வந்தார்களோ அவர்களுக்கு புடவை வழங்க கோரினர். இறுதியில், பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் பெண்களுக்கு புடவை விற்பனை செய்யப்பட்டது.எனினும், வண்ணம் மற்றும் டிசைனை தேர்வு செய்து புடவையை வாங்க முடியவில்லை என பெண்கள் குறைப்பட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.

 
 

Advertisment

English Summary

Women in 'Q' to buy silk sari in Mysore

 
NewsFast Logo