Advertisment

Punnagai Logo

உலகில் இன்னும் நீங்கள்(மோடி) சுற்றிப்பார்க்க வேண்டிய நாடுகள் சில இருக்கின்றது  -சத்ருகன் சின்ஹா டுவீட்...

 மோடி ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.   தென் ஆப்பிரிக்கா செல்லும் வழியில், ருவாண்டா நாட்டுக்குச் சென்ற  மோடி அந்த நாட்டுடன் 8 ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டார். கிரிங்கா எனும் திட்டத்துக்காக 200 பசுமாடுகளை அன்பளிக்காக வழங்கினார்.

 பாராளுமன்றக்கூட்டத்தொடர்  நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்தில் ரபேல் போர் விமான விவகாரத்தில், பிரதமர் மோடியும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும் அவைக்கு தவறான தகவல் அளித்ததாக கூறி, அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்தது. 

இந்தநிலையில், இது குறித்து பாஜகவின் மூத்த எம்.பி.யும், இந்தி நடிகருமான சத்ருகன் சின்ஹா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

அன்புள்ள மோடி சார், பாராளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிவிட்டது.  வழக்கம்போல் அதில் பங்கேற்காமல் 3 நாடுகளுக்கு  ஆப்பிரிக்க பயணம் சென்றுவிட்டீர்கள். பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்தபின் நீங்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டால், வேறு ஏதேனும் மிகப்பெரிய பிரச்சனை வந்துவிடாதே என கேள்வி எழுப்பி உள்ளார்.

அதனை தொடர்ந்து,  உலகில் இன்னும் நீங்கள் சுற்றிப்பார்க்க வேண்டிய நாடுகள் சில இருக்கின்றது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்குச் சென்ற முதல் பிரதமர் நீங்கள்தான் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

உங்களின் கட்டிப்பிடி வைத்தியம்  இந்தியாவில் மிகப்பெரிய செய்தியாக உலாவிக்கொண்டிருக்கிறது. ருவாண்டா மரபுகள்படி, அங்குள்ள தலைவருக்கு கைகுலுக்கித்தான் வாழ்த்துத் தெரிவிக்க முடியுமாம்.

ருவாண்டா நாட்டின் ஒரு குடும்பத்துக்கு ஒரு பசு திட்டமான கிரிங்கா திட்டம் . சமூக பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் 200 பசுமாடுகளை நீங்கள் அன்பளிப்பாக ஒரு கிராம மக்களுக்கு அளித்தது, மிகப்பெரிய சாதனை.  புதிதாக்கமான சிந்தனை. உங்களின் இந்தச் செயலால், இந்தியா, ருவாண்டா ஆகிய மிகப்பெரிய நாடுகளின் நட்புறவு, மேலும் நெருங்கி, வலிமையடைய உதவும்.

ஆனால், மோடி சார், இந்தியாவுக்கு வாங்க. பசு பாதுகாவலர்களால் அப்பாவிமக்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய செய்தியாக்கி இருக்கிறார்கள்.  ஆனால் மோடி சார் நீங்கள் இதுவரை ஒரு வார்த்தை கூட இதைப்பற்றிப் பேசவில்லை. இது குறித்து வெளிநாட்டில் இருந்து கூட கருத்துச் சொல்லலாம்.

ஒரு பணிவான வேண்டுகோள், ரபேல் போர்விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக அரசுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் தாக்கலாகி இருக்கிறது. ஜெய் ஹிந்த்.

இவ்வாறு சத்ருஹன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
Dear Sir! As usual,while Parliament is in session, you are on a 3 Nation African tour. Heavens wouldn't have fallen if you'd left after the session. You could have still visited some of the nations left on the globe.Your visit to Rwanda is a first by an Indian PM Congrats!..1>2

— Shatrughan Sinha (@ShatruganSinha) July 25, 2018
Now a handshake in Rwanda wud be within protocol(since your HUG is still making big news here). Interestingly you will be part of the program 'Girinka' (one cow per family) at the Genocide Memorial-a national social protection scheme personally started by Rwanda President...2>3

— Shatrughan Sinha (@ShatruganSinha) July 25, 2018
Great & thoughtful initiative that you will gift 200 cows to a village in this event.This will truly further strengthen the warm, close & friendly relationship shared between the two great nations. But Sir! Back home, Opposition is in big news over lynching by Cow rakshaks & 3>4

— Shatrughan Sinha (@ShatruganSinha) July 25, 2018
&killing of innocent people, alleging tht some of our people are hand & glove in these horrific deeds. Still,not a word from you,Sir! You can do it from a foreign land too.Also, humble request to direct us as a privilege motion on Rafale deal against Govt has been moved.Jai Hind!

— Shatrughan Sinha (@ShatruganSinha) July 25, 2018

 
 

Advertisment

English Summary

You (Modi) could have still visited some of the nations left on the globe -Sinha Tweet

 
NewsFast Logo