Advertisment

Punnagai Logo

காம உணர்வுக்கு தீனி போடும் உணவுப் பொருட்கள் – 'A' 1 தகவல்கள்

காம உணர்வுகளின் காரணகர்த்தாவாக இருப்பவை ஹார்மோன்களே. ஆணுக்குடெஸ்டோஸ்டீரான், பெண்ணுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் பால் உணர்வின்காரணிகள். புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் பாலுணர்வுக்குப் பக்கபலமாகஇருப்பவை. இந்த ஹார்மோன்கள் அளவைத் தூண்டும் உணவுகளே காமம் கூட்டும் உணவுகளாகும். 

திருமணமான தம்பதியர் அடிப்படையில் சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ளவேண்டும். உடல் எடையைக் கூட்டும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஜீரணக்குறைபாடுகள் ஏற்படுத்தும் உணவுகள், நோய்த்தொற்றை உண்டாக்கும்சாலையோர உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத்திருமணமான புதிதிலேயே தவிர்த்துவிடலாம். இவை உடலில் ஏற்படுத்தும் தொந்தரவுகள் உங்களின் தாம்பத்ய வாழ்க்கைக்கு சிரமம் தரலாம். 

இரவு உணவுக்குப் பின்னர் பலர் வாழைப்பழம் எடுத்துக் கொள்வதை வழக்கமாகக்கொண்டுள்ளனர். வாழைப் பழத்தில் பொட்டாசியம், ஏ.பி.சி, வைட்டமின்கள்ஆகியவை நிறைந்துள்ளது. இவை உடலில் உள்ள டெஸ்டோஸ்டீரோன்ஹார்மோன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. வாழைப்பழத்தில் உள்ளஅதிகப்படியான சர்க்கரையும் உடலுக்கு சக்தி அளிக்கிறது. ஜிங்க் சத்து அதிகம் உள்ள உணவுகளும் டெஸ்டோஸ்டீரோன் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. 

பூண்டு ரத்த ஓட்டத்தை சீராக்கும் பணிகளைச் செய்கிறது. ரத்தத்தில் சேரும்அதிகப்படியான கொழுப்பையும் பூண்டு கரைத்துவிடுகிறது. ஆணுறுப்பு விறைப்புத்தன்மை அடைவதற்கான நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தோஸ் உற்பத்திக்கு பூண்டுஉதவுகிறது. இதனால் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம். கடல் உணவுகளில்இருந்து கிடைக்கும் அதிகப்படியான ஜிங்க் சத்தும் காம உணர்வைத் தூண்டும்ஹார்மோன்கள் உற்பத்திக்கு உதவுகிறது. எனவே, கடல் உணவுகளான மீன்வகைகள், நண்டு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

காரம் அதிகம் உள்ள மிளகாய், இஞ்சி, பட்டை, கிராம்பு போன்றவையும் உடலில்எண்டார்பின் என்ற வேதிப்பொருளை சுரக்கச் செய்கிறது. மிளகாயில் உள்ள சிலவேதிப்பொருட்கள் ரத்த ஓட்டம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது.உடல் வெப்ப அதிகரிப்பு மற்றும் அதிக வியர்வைச் சுரப்புக்கும் உதவுகிறது. 

காமப் பொழுதில் உணர்வின் உயரங்களை எட்டித் தொட்டு காதல் கொண்டாட  காரமும், வாசனை மிகுந்த மசாலாப் பொருட்களும் உதவுகின்றன. ஈஸ்ட்ரோஜென்மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும் வேலையையும் இவைசெய்கின்றன. பரங்கிக்காயில் உள்ள விதையை உடைத்தால் பருப்பு கிடைக்கும்.இதில் புரதச்சத்து நிறைந்துள்ளது. தினமும் சாப்பிட்டால் ரத்தத்தில் சக்கரையின்அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச்செய்கிறது. மலட்டுத்தன்மையை நீக்கவும் பயன்படுகிறது. 

ஓட்ஸ் தினமும் எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள புரதம் டெஸ்டோஸ்டீரோன்உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. ஆண்களுக்கு மன இறுக்கம், மன அழுத்தம்ஏற்படாமல் தடுக்கிறது. கேரட்டில் உள்ள கனிமம் மற்றும் வைட்டமின்கள்ஆணுறுப்பு தசைகளின் வலிமைக்கு உதவுகிறது. பிறப்புறுப்பின் ரத்த ஓட்டத்தையும்அதிகரிக்கச் செய்கிறது. 

டார்க் சாக்லெட் காதல் சொல்வதற்கு மட்டுமல்ல காமம் கொள்வதற்கும் ஏற்றது.மூளையில் சந்தோஷத்தைத் தூண்டிவிடும். செரொட்டோனின், ஃபீனைல்எத்திலமைன் ஆகிய வேதிப் பொருட்கள் டார்க் சாக்லெட்டிலும் உள்ளது. டார்க்சாக்லெட் சாப்பிடும்போது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.எனவே, பாலுறவுக்கு முன்பாக உங்கள் இணைக்கு டார்க் சாக்லெட் பரிசளியுங்கள்.இது பாலுறவின்போது அன்பையும் ஆர்வத்தையும் அள்ளித்தரும். 

அவகேடாவும் காமத்தின் எனர்ஜியைக் கூட்டக் கூடியது. இப்பழத்தில் பீட்டாகரோட்டின், மக்னீசியம், வைட்டமின் ஈ, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள்நிறைந்துள்ளது. இவை உங்களது மூளையில் காம உணர்வைத் தூண்டக் கூடியது.இவற்றை எடுத்துக் கொண்டால் அன்பால் இணையை வீழ்த்தலாம். 

 
 

Advertisment

English Summary

Food products for Sex

 
NewsFast Logo