Advertisment

Punnagai Logo

வெற்றிக்கு வித்திடும் மென்திறமைகள் - ஒரு விரிவான பார்வை

அலுவலகத்தில் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு உயர் பதவி படிக்கட்டுகளில் சரசரவென ஏறி முதலிடம் பிடிக்க  கீழ்க்கண்ட   மென்திறமைகள்  கட்டாயம் தேவை...

நமக்கான இடத்தை நிரப்புதல்:

நம்மை என்ன நோக்கத்திற்காக எடுதார்களே அதை சிறந்த முறையில் செய்து முடிப்பது. சிறு துளிதான் பெரு வெள்ளமாகும். ஒவ்வெருவரும் தனக்கான வேலையை சரியாக செய்யும் பட்சத்தில் நிர்வாகம் சரியான முறையில் முன்னேற்றப் பாதையில் இயங்கும்.

 

விதிகளை பின்பற்றுதல்:

நமக்கு நிர்வாகத்தின் மூலம் என்ன பொறுப்புகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். நாம் உயர் அதிகாரி என்பதற்காக 5 நிமிடம் தாமதமாக போனால் பரவாயில்லை என்று எண்ணம் கொண்டிருப்பது மிகத் தவறானது. ஊழியர்களுக்கு என்ன விதி என வகுக்கப்பட்டுள்ளதோ அதைச் சரியாக பின்பற்றுவது. நாம் எப்போதும் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க ஒரு வாய்ப்பாக அமையும்.

 

ஆவணப்படுத்தும் திறமை:

பணி குறித்து ஒரு விஷயம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தால், அதைப்பற்றி முழுமையாக உள்வாங்குவதோடு, அதை சரியான முறையில் பின்பற்றுதல் மற்றும் ஆவணப்படுத்துதல் போன்ற திறமைகளை வளர்த்துகொள்ள வேண்டும். இது இங்கு அல்ல வேறு எங்கு பணியாற்றினாலும் பயன்படும்.

 

அளவீடு செய்யும் திறமை:

அது எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். 100 பேர் கலந்து கொள்ளும் கூட்டமாக இருந்தால் அதற்கான தயாரிப்பு என்ன? என்பதில் தொடங்கி இதே வேகத்தில் நகர்ந்தால் நிர்வாகம் இந்தாண்டு இவ்வளவு லாபம் ஈட்டும் என்பது வரை தெளிவாக அளவீடு செய்யும் திறமை பெற்றிருக்க வேண்டும்.

 

இக்கட்டான சூழ்நிலைகளை கையாளும் திறன்:

நிர்வாகம் எப்போதுமே சரியான பாதையில் தான் பயணிக்கும் என்பதை யாரலும் கணிக்க முடியாது. எனவே எப்போதும் எதையும், எதிர்கொள்ள தயாராக இருப்பதோடு, அதை யாருக்கும் பாதகமில்லாமல் எடுத்து கூறும் திறமை பெற்றிருக்க வேண்டும்.

 

ஒத்துப்போகும் திறன்:

எப்போதும் தனியாக தெரிய வேண்டும் என ஆசைப்படுவது தவறில்லை அதற்காக காலரை தூக்கிவிட்டுக்கொண்டே சுற்றக்கூடாது. எல்லா விஷயங்களில் இல்லாவிட்டாலும் கூட நிர்வாகத்தின் நலன் கருதி எடுக்கும் முடிவுகளில் மட்டுமாவது ஒத்துப்போகும் மனப்பான்மை பெற்றிருக்க வேண்டும். இல்லை என்றால் 'யானைக்கும் அடி சறுக்கும்' என்பது போல வீழ்ந்தால் தூக்கிவிட யாரும் இருக்கமாட்டார்கள்.

 

மாற்றங்களை ஏற்படுத்துபவராகத் திகழுதல்:

'வீடு எப்படியோ அப்படித்தான் நாடும்' என்பதுபோல் மாற்றங்களை நம்மில் இருந்து கொண்டுவர வேண்டும். இதுதான் ஒரு சரியான முன் மாதிரிக்கான அடையாளம். குறிப்பிட்ட வேலைகளை திட்டமிட்டு சரியாக முடிக்கும் பட்சத்தில் எவ்வித பிரச்னைகளும் எழ வாய்ப்பில்லை. மாற்றத்திற்கான அடையாளமாக திகழ முற்படுங்கள்.

 

வளைந்து கொடுக்கும் தன்மை:

ஒரு சில நேரங்களில் நம்மை அறியாமல் வேலையில் தாமதம் ஏற்படவே, அல்லது தொய்வு ஏற்படவே வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் எங்கு நம் தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து அதை நிவர்த்தி செய்வதை விட்டுவிட்டு, ஊழியர்களிடம் கரராக இருந்து ஒரு புரோஜனமும் இல்லை. நெழிவுசுழிவாக பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும்.

 

அலசி ஆராய்ந்து சிந்திக்கும் திறன்:

ஒரு வேலை நம்மிடம் ஒப்படைக்கப்பட்டால் எதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கியத்துவம் என்ன போன்ற காரணிகளை அலசி ஆராய்ந்து அதற்கேற்றார்போல் செயல்பட வேண்டும். நிர்வாகத்தின் சிக்கல் என்ன, ஊழியர்களின் சிக்கல் என்ன போன்ற விஷயங்களை ஆராய்ந்து செயல்படும் போது வெற்றிக்கான காற்று நம் பக்கம் மட்டுமே வீசும்.

 

குழு நிர்வாகத் திறன்:

இன்று உங்கள் டீம் லீடர் விடுமுறை டீமை நீங்க லீட் பண்ணுங்க என்று ஒரு கட்டளை வந்தால், அதை செயல்படுத்தும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும். எப்போதும் தலைமைப் பண்பிற்காக தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். எதையும் அணுகும் மனப்பான்மை பெற்றிருக்க வேண்டும்.

 
 

Advertisment

English Summary

Soft Skills for Success

 
NewsFast Logo