Advertisment

Punnagai Logo

ஆண்டாளை தாயாக ஏற்றுக்கொண்ட வைரமுத்து, தாயிடம் மன்னிப்பு கோர தயங்குவது ஏன்?

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆலயம் கொண்டுள்ள ஆண்டாளை, மிகவும் மோசமான முறையில் சித்தரித்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளதாக ஆன்மீக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இந்த சூழலில், ஆண்டாள் விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், ஆண்டாளை தாயராக ஏற்றுக்கொள்வதாக அறிக்கை விட்ட கவிஞர் வைரமுத்து, தனது தாயிடம் மன்னிப்பு கேட்க தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, ஆண்டாளின் புகழ்பாடும்போது, மற்றவர்களுக்கு பக்தி பிறந்தாலும், தனக்கு அதிகப்படியான சக்தி உருவாவதாகவும், ஆண்டாளை பளித்துப்பேச நான் முன்படுவேனா, தனது கருத்தை தந்திரமாக மாற்றிக்கூறி, தமிழகத்தில் மதவன்முறையை ஏற்படுத்த முயல்வதாகவும் வைரமுத்து விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 
 

Advertisment

English Summary

Andal issue minister pon.radha question to vairamuthu

 
NewsFast Logo