Advertisment

Punnagai Logo

அனைவரது இல்லங்களிலும் கழிவறை கட்டாயம்... முதலமைச்சரின் செல்ல மிரட்டல்...

ஆந்திர பிரதேசம் மாநிலத்தை திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநிலமாக உருவாக்கும் நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் கழிவறையை கட்ட மார்ச் 31-ம் தேதியை இறுதி நாளாக சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார்.

இந்த இலக்கை அடையவில்லை என்றால் தர்ணாவின் ஈடுபடுவேன், உண்ணாவிரதம் இருப்பேன் என் கூறிஉள்ளார். சுகாதாரம் முதன்மையானது என குறிப்பிட்டு உள்ள சந்திரபாபு நாயுடு, “நான் அமைதியாக தர்ணாவில் ஈடுபடுவேன், உண்ணாவிரதம் இருப்பேன்.

அதன்பின்னராவது மக்கள் என் மீது சிறிதளவு கருணையை காட்டுவீர்கள், வீடுகளில் கழிவறையை கட்டுவீர்கள்,” என கூறிஉள்ளார். 

என்னுடைய நோக்கம் எல்லாம் தூய்மையான மற்றும் சுகாதாரமான ஆந்திர பிரதேசம் மட்டும்தான் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

 
 

Advertisment

English Summary

andra cm request state people all house built toilet

 
NewsFast Logo