Advertisment

Punnagai Logo

பா.ஜ.க. தொண்டர் படுகொலை - கர்நாடகாவில் பெரும் பதற்றம்

 

கர்நாடகாவில் பா.ஜ.க. தொண்டர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மங்களூரு அருகே காட்டிபள்ளா பகுதியை சேர்ந்தவர் தீபக் ராவ்.  பா.ஜ.க. தொண்டரான இவரை மர்மநபர்கள் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூரத்கல் போலீசார், சினிமா பட பாணியில் துரத்திச் சென்று கொலையாளிகள் 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு கொலையான தீபக் ராவின் உடலை ஊர்வலமாக அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்ல பா.ஜனதாவினர் முயன்றனர். ஆனால் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடக்கக்கூடும் என கருதிய போலீசார், அனுமதி கொடுக்கவில்லை. 

இருப்பினும் அவரது உறவினர்களும், பா.ஜனதாவினரும் பிணவறை அருகே குவிந்திருந்தனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில் பிணவறையின் பின்வாசல் வழியாக தீபக் ராவின் உடலை போலீசார் எடுத்துச் சென்று அமரர் ஊர்தி மூலம் காட்டிபள்ளாவுக்கு கொண்டு சென்றனர். அமரர் ஊர்தியில் தீபக் ராவின் குடும்பத்தினரும் அழைத்துச் செல்லப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பா.ஜனதாவினரும், காட்டிபள்ளா பகுதி மக்களும் நூற்றுக்கணக்கானோர் அங்கு குவிந்தனர். போலீசார், அவசரம், அவசரமாக தீபக் ராவின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தாமல் அடக்கம் செய்ய கொண்டு செல்ல முயன்றனர்.

பல போராட்டங்களுக்கு இடையே தீபக்கின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், இப்படுகொலையைக் கண்டித்து  சூரத்கல், காட்டிபள்ளா, கைகம்பா பகுதிகளில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி அந்தப் பகுதிகளில் ஓட்டல்கள், பேக்கரிகள், மளிகைக்கடைகள் என அனைத்து வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தன. மேலும் முழுஅடைப்பு காரணமாக தனியார், அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. 

 
 

Advertisment

English Summary

Bajrang Dal activist hacked to death in Karnataka's Mangaluru; BJP terms it cold-blooded murder

 
NewsFast Logo