Advertisment

Punnagai Logo

மத்திய பட்ஜெட், மாநிலத் தேர்தல்கள்- பாஜக தலைவர்களுடன் மோடி ஆலோசனை

 

பாஜக மூத்தத் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

 திரிபுரா, மேகாலயா மாநிலங்களிலும், அடுத்ததாக கர்நாடகாவிலும் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இவற்றில் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கான வியூகங்களை வகுப்பதற்காக, பிரதமர் மோடி பாஜக மூத்த தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். மோடியின் இல்லத்தில் நடந்த இந்த கூட்டத்தில், பாஜக  தலைவர் அமித்ஷா மற்றும் கட்சியின் மூத்தத் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

சுமார் மூன்று மணி நேரம் இக்கூட்டம் நடந்தது. நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், விரைவில் நடக்க உள்ள நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளிட்டவை தொடர்பாகவும் இதில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இக்கூட்டம் குறித்து பாஜ வட்டாரங்கள் கூறுகையில், ‘‘அடுத்ததாக நடக்க உள்ள மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜ.கவிற்கு பெரும் வெற்றியை தேடி தருவதற்கான வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது’ என்றன.

 
 

Advertisment

English Summary

BJP discuss budget and state election

 
NewsFast Logo