Advertisment

Punnagai Logo

பொய்யான வாக்குறுதிகளால் மக்களை பாஜக முட்டாளாக்குகிறது... காங்கிரஸ் குற்றச்சாட்டு...

கோவாவில் காங்கிரஸ் செய்தி தொடர்பு அதிகாரி பிரான்சிஸ்கோ சர்டின்ஹா பனாஜியில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், உங்கள் நாட்டின் தேசிய பழம் வாழைப்பழமா என்று சிலர் கேட்பதாக தெரிவித்தார்.

ஏனென்றால் பாரதீய ஜனதா தலைவர்கள் இந்தியில், ஹம் யே பனாயேங்கே, ஹம் வோ பனாயேங்கே (நாங்கள் இதனை கட்டுவோம், நாங்கள் அதனை கட்டுவோம்) என கூறி வருகின்றனர் என்று கூறினார்.

அதனால் நான் இதனை குறிப்பிடுகிறேன். தேசிய பழம் மாம்பழம் என்பதற்கு பதிலாக வாழைப்பழம் தேசிய பழம் ஆக்கப்பட வேண்டும். மக்கள் இதனை வலியுறுத்துவார்கள். இந்திய மக்களுக்கு பாரதீய ஜனதா கட்சி தவறான வாக்குறுதிகளை அளித்து வருகிறது.

இதன்மூலம் நாட்டு மக்களை பாஜக முட்டாள்களாக மாற்றி வருவதாகவும், வாய் பேச்சுடன் நின்றுவிடாமல், சில விசயங்களையும் செய்ய பாஜக செய்ய வேண்டும் என்றும் பிரான்சிஸ்கோ சர்டின்ஹா வலியுறுத்தியுள்ளார்.

 
 

Advertisment

English Summary

bjp mockery people says congress

 
NewsFast Logo