Advertisment

Punnagai Logo

பாஜகவின் கையாள் ரஜினி- இயக்குநர் கௌதமன் காட்டம்

இயக்குனர் கவுதமன், சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்த ஆண்டு மிகவும் துயரமான மனநிலையில் தொடங்குகிறது. என் தமிழ் இன மக்கள் உயிர், உரிமைகளை இழந்து, விடியல் பிறக்காதா என்று போராடி வரும் நிலையில் ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு ஆன்மீக ஆட்சி செய்வேன் என்று கூறி புத்தாண்டு பரிசாக துக்க செய்தி கொடுத்துள்ளார்.  போயஸ் கார்டனில் மீண்டும் ஒரு அதிகார வர்க்கத்தை தோற்றுவிக்க நினைக்கிறார்கள். பாஜகவின் கையாளான ரஜினிக்குப்  பிறகு லதா ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார். 

 

இதன் மூலம் அதிகார வர்க்கம் தொடர்ந்து ஆட்சி செய்ய நினைக்கிறார்கள். இதில் ஒருபோதும் எங்கள் தமிழினம் சிக்காது. எவர் வந்தாலும் தடுத்து நிறுத்துவோம். ரஜினிகாந்த் எந்தத் தொகுதியில் நின்றாலும் எதிர்த்து நின்று தோற்கடித்து வீழ்த்துவேன், இதேபோல் 234 தொகுதிகளிலும் ரஜினியை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் ஒன்றுகூடி தேர்தலை சந்திப்போம். அதில் பெண்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படும்.

 

இவ்வாறு கவுதமன் கூறினார்.

 
 

Advertisment

English Summary

BJP's handler Rajini - Director Gowthaman

 
NewsFast Logo