Advertisment

Punnagai Logo

ராஜஸ்தான் மக்களவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை... காங். முன்னிலை...

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மற்றும் அஜ்மீர் மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  விரைவில் ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அதற்கான முன்னோட்டமாக இந்த மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது. இதேபோல், மண்டல்கர் என்னும் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டல்கர் சட்டமன்ற தொகுதியில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் முன்னிலை வகிக்கக் காரணமாக கூறப்படுவது, பத்மாவத் திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்ததுதான் என்று கூறப்படுகிறது. ராஜ்புத் மக்கள், மத்திய பாஜக அரசுக்கு எதிராக வாக்களித்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

இதேபோல், மேற்குவங்கத்தில் உள்ள உலுபெரியா மற்றும் நோவபாரா ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.  

 
 

Advertisment

English Summary

Congress Leads In Alwar, Ajmer In Crucial Rajasthan Bypolls

 
NewsFast Logo