Advertisment

Punnagai Logo

திமுக சாலை மறியல்- ஸ்டாலின் கைது

பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுக்க திமுகவினர் இன்று சாலை மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

திமுக செயல் தலைவர் சென்னைக் கொளத்தூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் ஸ்டாலினை போலிசார் கைது செய்தனர். இதே போல ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திமுக வினர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட ஸ்டாலின் பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால் இதை விட பெரிய போராட்டத்தை திமுக நடத்தும் என்று கூறியுள்ளார்.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் திமுக மட்டுமல்லாமல் அதன் கூட்டனிக் கட்சிகளான காங்கிரஸ் , மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
 

Advertisment

English Summary

DMK road stalker - Stalin arrested

 
NewsFast Logo